பொள்ளாச்சி: தமிழ்நாடு முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
முக்கியமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலையில் பொதுமக்களின் நலன்கருதி இன்றுமுதல் ஆழியார் அணை பூங்கா செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குப் பொதுப்பணித் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
மேலும் ஆலய அணைப்பகுதி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் அத்துமீறும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க காவல் துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சிட் ஃபண்ட் நடத்தி ஊரையே ஏமாற்றிய குடும்பம் தலைமறைவு