ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் தீ குளிப்பு சம்பவம்.. போலீசார் நூதன முறையில் சோதனை!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் பாட்டிற்குள் மண்ணெண்ணய் ஊற்றி எடுத்துவந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவத்தை தடுக்க, பொதுமக்கள் கொண்டுவரும் தண்ணீர் பாட்டிலை அவர்களையே குடிக்க வைத்து சோதனை செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 23, 2023, 4:06 PM IST

மனு கொடுக்க வந்த மக்களிடம் காவல் துறை சோதனை

கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர். இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். அதே சமயம் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர் பொதுமக்களையும் அவர்களது உடைமைகள் அனைத்தையும் சோதனை மேற்கொண்ட பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிப்பர்.

கடந்த வாரம் பொங்கல் பண்டிகை விடுமுறை என்பதால் இன்றைய தினம் அதிக அளவிலான பொதுமக்கள் மனு அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். இன்னும் இரண்டு தினங்களில் குடியரசு தின விழா கொண்டாட உள்ளதை ஒட்டியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு அளிக்க வரும் பொதுமக்களின் உடைமைகள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

பல்வேறு சமயங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களில் சிலர் தண்ணீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் போன்றவற்றை எடுத்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மனு அளிக்க வந்த நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்றைய தினம் பொதுமக்களிடம் சோதனை மேற்கொள்ளும் காவல்துறையினர் பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலைச் சோதனை செய்து அதனை பொதுமக்களே குடித்துக் காண்பிக்கச் செய்து பின்னர் உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழப்பு.. 10 பேர் கவலைக்கிடம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.