கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளுக்காக தனியார் ஒப்பந்த வாகனங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை (ஆகஸ்ட் 10) நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மீது கல் வீசி சேதப்படுத்தியுள்ளனர். மேலும், அலுவலக கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த மேலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.