ETV Bharat / state

கோடநாடு வழக்கு - ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த தொழிலதிபரிடம் விசாரணை - கோடநாடு வழக்கு விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

கோடநாடு வழக்கு
கோடநாடு வழக்கு
author img

By

Published : Jul 8, 2022, 10:33 AM IST

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் செந்தில்குமாரிடம் தனிப்படை காவல் துறையினர் நேற்று (ஜூலை 07) விசாரணை மேற்கொண்டனர். ‘செந்தில் பேப்பர் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான செந்தில்குமார், அதிமுக தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்தவரான மணல் ஓ.ஆறுமுக சாமியின் மகன்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக வலம் வந்தவர். தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மணல் எடுக்கும் பணிகளை செய்து வந்தவர். ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு மிக நெருக்கமானவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தவர் ஓ. ஆறுமுகசாமி. பேப்பர், ஸ்டீல் , பழங்கள், கட்டுமானம் என பல்வேறு தொழில்களில் ஓ.ஆறுமுகசாமியும் அவரது மகன் செந்தில்குமாரும் முதலீடு செய்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவத்தின் பொழுது கோடநாடு பங்களாவில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி ஓ. ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையின்போது பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர் . சமீபத்தில் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல் தனிப்படை காவல் துறையினருக்கு கிடைத்த நிலையில், தனிப்படை காவல் துறையினர் அந்த ஆவணங்களை வருமான வரித்துறையுடம் இருந்து பெற்று அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை சிஐடி காலணியில் உள்ள செந்தில்குமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கோடநாடு பங்களாவில் இருந்து திருடப்பட்ட ஆவணங்களா என்ற சந்தேகம் தனிப்படை காவல் துறையினருக்கு எழுந்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள செந்தில்குமாரை தனிப்படை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். மாலை 3 மணி முதல் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணையானது நடைபெற்றது.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் ஐடி ரெய்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.