ETV Bharat / state

பால் பண்ணை உரிமையாளரை மிரட்டிய பாஜக, விசிக நிர்வாகிகள் மீது வழக்கு! - bharathiya janatha party

கோவையில் பால் பண்ணை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்த பாஜக, விசிக கட்சி நிர்வாகிகள் மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பால் பண்ணை உரிமையாளரை மிரட்டிய பாஜக, விசிக நிர்வாகிகள் மீது போலீசார் விசாரணை

author img

By

Published : Jun 2, 2023, 1:21 PM IST

கோவை: ஆர்.எஸ்.புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் ஜனார்த்தனன். இவரது மனைவி அபிநயா. கடந்த 2021 ஆம் ஆண்டு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்குச் சொந்தக்காரர் என்று கூறி அபிநயாவிடம் பால் பண்ணை நடத்துவதற்காக காலி இடத்தை வாடகைக்குக் கொடுப்பதாகக் கூறி உள்ளனர்.

அங்கு மாட்டுப் பண்ணை வைப்பதற்கு ரூபாய் 60 லட்சம் செலவாகும் என்று அபிநயா கூறி உள்ளார். அதற்கு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாராளமாக மாட்டுப் பண்ணை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர். இந்த மாட்டுப் பண்ணைக்கு மாத வாடகை ரூபாய் 30 ஆயிரம் எனவும் அட்வான்ஸ் தொகையாக ரூபாய் 3 லட்சம் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இவ்வாறாக 3 மாத காலமாக வாடகையைப் பெற்றுக் கொண்டிருந்த மணிகண்டன், பாரதி மீண்டும் இந்த இடத்திற்கு வாடகை வேண்டாம் எனவும் அவர்களுக்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி குத்தகையாக மாற்றிக் கொள்ளலாம் என பத்து வருடத்திற்குக் குத்தகை எனப் பேசி முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் பாரதி 21 லட்சத்து 50 ஆயிரம் வங்கிக் கணக்குகளிலும், பணமாக 30 லட்சமும் என 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபிநயா கொடுத்து உள்ளார்.

இதற்கிடையில் அந்த வளாகத்தில் மாட்டுப் பண்ணையை ஆரம்பித்து 20 மாடுகளும், பால் விற்பனைக் கடை என கட்டுமான பணிகளை 65 லட்ச ரூபாய்க்கு அபிநயா மேற்கொண்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக மாட்டு பண்ணை நடத்தி வந்து உள்ளனர். திடீரென சிலர் மாட்டுப் பண்ணையை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.

மேலும், வீர கேரளத்தைச் சேர்ந்த நிர்மலா, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பாலசிங்கம், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கவிதா ஆகியோர் போன் மூலமும் நேரிலும் வந்து பால் பண்ணை உரிமையாளர் அபிநயாவை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அருகில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அபிநயா புகார் அளித்து உள்ளார்.

புகாரின் பேரில் வந்த போலீசார் அபிநயாவை மிரட்டியதாக கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலசிங்கம், வீர கேரளம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தச் கவிதா ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

இதையும் படிங்க: துபாய், கோலாலம்பூரில் இருந்து தங்கம் கடத்தல்.. திருச்சியில் குருவி கைது.. சுங்கத்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.