உலகை உலுக்கும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்களால் முடிந்தவற்றை கரோனா நிதிக்கு வழங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதையடுத்து பல்வேறு அமைப்பினர், திரைப்பட நடிகர்கள், தனியார் ஊழியர்கள் உள்ளிட்டோர் கரோனா நிதி வழங்கிவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் ஆயுதப்படை முதல் நிலை காவலர் பாபு என்பவர் தனது ஒரு மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்து 788 ரூபாய்யை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். அதற்கான வரைவோலையை அவர் இன்று(ஏப்ரல் 17) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் வழங்கினார்.
இதையும் படிங்க: வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு 5.9 மில்லியன் டாலர்கள் சுகாதார நிதி