கோயம்புத்தூர்: கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக மாநகரின் முக்கிய பகுதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை வலையத்திற்குள் வந்தவர்கள், கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளவர்கள் என 50 பேர் தொடர்ந்து மாநகரப் போலீசார் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த 21ஆம் தேதி கார் வெடிப்பின் போது உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு நெருங்கிய தொடர்பில் உள்ள நபர்கள் இல்லங்களிலும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணையும் ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்கள்.
கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடித்த சம்பவம் விசாரணையை என்.ஐ.ஏ அதிகாரிகள் ஒருபக்கம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் மாநகர போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்.ஐ.ஏ விசாரித்த நபர்களை கண்காணித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: 'நான் பெரிய ரவுடி.. வீடும் ஸ்கூலும் எனக்குத்தான்..' தம்பதியை மிரட்டிய பாஜக நிர்வாகி சூர்யா சிவா