கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வஞ்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவர், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், வெங்கடேஷ் பிரபு(26) என்ற மகனும் உள்ளனர்.
வெங்கடேஷ் பிரபு கடந்த 2019ஆம் ஆண்டு ஐஎப்எஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தற்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பயிற்சியில் உள்ளார். பயிற்சியின் போது சென்னையில் நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் கலந்து கொண்டார். தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 4) வெளியான நிலையில், அகில இந்திய அளவில் 751ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதனையடுத்து கோவை மற்றும் தமிழ்நாடு முழுவதுமுள்ள காவல்துறை உயர் அலுவலர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 5) காலை 7 மணிக்கு வெங்கடேஷ் பிரபு தந்தை நாகரத்தினத்துடன் தொலைபேசியில் பேச உள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன்: யார் இந்த அங்கொடா லொக்கா?