ETV Bharat / state

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு? இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை

கோவை: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இஸ்லாமியர்கள் தொடர்பில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கோவை மாநகர காவல்துறையினர் இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்லாமியர்கள் வீடுகளில் சோதனை
author img

By

Published : Jul 15, 2019, 11:37 AM IST

கோவையைச் சேர்ந்த சிலர், தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கத்தினருடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருப்பதாக கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர், மூன்று குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கரும்புகடை பகுதியில் ஆட்டோ பைசல், உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் சதாம் உசேன், பீளமேடு பகுதியில் முகம்மது புர்கான் ஆகியோர் வீடுகளில், இன்று அதிகாலை முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் காவல் துறையினருடன் வருவாய்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இஸ்லாமியர்கள் வீடுகளில் சோதனை

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ பைசல் என்பவரும், திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி கொலை வழக்கில் சதாம் உசேன் என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கத்தினருடன் சமூக வலைதளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து கோவை மாநாகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.Body:தடை செய்யப்பட்ட இஸ்லாமிய இயக்கத்தினருடன் சமூக வலைதளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாநகர போலீசார் இன்று மூன்று குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
கரும்புகடை பகுதியில் ஆட்டோ பைசல் என்பவரது வீட்டிலும், உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் சதாம் உசேன் என்பவரது வீட்டிலும், பீளமேடு பகுதியில் முகம்மது புர்கான் என்பவரது வீட்டிலும் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. காலை ஐந்து முப்பது மணி முதல் இந்த சோதனை அளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. சோதனையின்போது கைப்பற்றப்படும் பொருட்களை பதிவு செய்வதற்காக வருவாய்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ பைசல் என்பவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு இருந்தார். இதே போன்று திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி கொலை வழக்கில் சதாம் உசேன் என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார். ஏற்கனவே குற்றச் சம்பவங்களில் தொடர்பில் இருக்கும் இந்த நபர்கள ஒரு உட்பட 3 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.