ETV Bharat / state

அடித்துக்கொலை செய்யப்பட்ட தொழிலாளி... போலீஸார் விசாரணை - கொலை வழக்கு

பொள்ளாச்சி அருகே தொழிலாளி ஒருவர், கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

murder issue in pollachi pollachi murder issue Coconut peeling worker murder case Coconut peeling worker murder issue pollachi Coconut peeling worker murder issue murder of a Coconut peeling worker near Pollachi அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி பொள்ளாச்சியில் தொழிலாளி கொலை தேங்காய் உரிக்கும் தொழிலாளி அடித்துக் கொலை பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி அடித்துக் கொலை கொலை வழக்கு பொள்ளாச்சி கொலை வழக்கு
அடித்துக் கொலை செய்யப்பட்ட தொழிலாளி
author img

By

Published : Feb 6, 2022, 7:23 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே திவான்சாதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மகாலிங்கம், செல்வராஜ். இவர்கள் இருவரும் அப்பகுதியில் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (பிப். 5) இரவு செல்வராஜ், மகாலிங்கம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, செல்வராஜ் மகாலிங்கத்தை மரக் கட்டையால் தாக்கி உள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக மகாலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகாலிங்கம் உயிரிழந்தார்.

இதையடுத்து மகாலிங்கத்தின் உறவினர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், வால்பாறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே இடத்தில் 7 ரவுடிகள்.. கொத்தாக தூக்கிய போலீஸ்... திருவள்ளூரில் திக் திக்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.