ETV Bharat / state

இளம்பெண்ணை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு...! - இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கி குழந்தை பிறந்தவுடன் விட்டுச் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் ஒருவர் மனு அளித்தார்.

the person who cheated on the girl  A Person cheated on the girl  Womens Cheating Cases  இளம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு  கோவை இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்குகள்
A Person cheated on the girl
author img

By

Published : Nov 27, 2020, 8:27 PM IST

கோவை மாவட்டம், சூலூர் பகுதி செஞ்சேரிப்புத்தூரைச் சேர்ந்தவர் பிருந்தா (வயது 25). இவரை அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி கர்ப்பமாக்கி, குழந்தை பிறந்தவுடன் ஏமாற்றியுள்ளார். இந்நிலையில், செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிருந்தா மனு அளித்தார்.

அந்த மனுவில், "கடந்த 5 வருடங்களுக்கு முன் செல்வம் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி தன்னை கர்ப்பமாக்கினார். இது குறித்து பெற்றோருக்கு தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

கர்ப்பமாகியது தனது பெற்றோருக்கு தெரிந்து அதன்பின் அவர்கள் செல்வத்தின் வீட்டிற்குச் சென்று திருமணம் குறித்து பேசும் போது அதற்கு செல்வம் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இது குறித்து ஏற்கனவே பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து செல்வம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தற்போது செல்வம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே எனக்கும் எனது நான்கு வயது குழந்தைக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:காதல் கணவரின் குடும்பத்தாரை காவல்துறை மிரட்டுவதாக இளம்பெண் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.