ETV Bharat / state

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் - Minister Dindigul Srinivasan Slipper issue

கோவை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அமைப்பினர் மாவட்ட ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

Dindigul Srinivasan tribal boy to remove slipper
Petition against Minister Dindigul Srinivasan
author img

By

Published : Feb 8, 2020, 11:17 AM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கடந்த 6ஆம் தேதி சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி இளைஞர் ஒருவரை அழைத்து காலணியை கழற்ற வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.எப்.ஐ, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே சிவஞானம் ”முதுமலை யானைகள் முகாமிற்கு சென்ற வனத்துறை அமைச்சர் அங்குள்ள பழங்குடி இளைஞர் ஒருவரை அழைத்து காலனியை கழற்றுமாறு கூறிய வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே தமிழக முதலமைச்சர் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு

பழங்குடியினரை எவ்வாறு எண்ணி இருக்கிறார் என்ற அவரது மன நிலையையே இது காட்டுகிறது. முதலமைச்சர் முன்னிலையில் ஆண்டுக்கு ஒருமுறை வன்கொடுமை தடுப்பு அமல்படுத்தும் கூட்டம் நடைபெறாமல் இருப்பதன் விளைவே நாட்டில் நடக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு காரணம்” என்றும் கூறினார்.

இதையும் படிங்க: காலணியை கழற்ற சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர்

Intro:அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு.Body:அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.எப்.ஐ, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆணையரிடம் புகார் மனு.

நேற்று முதுமலை யானைகள் முகாமிற்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி இளைஞர் ஒருவரை அழைத்து காலணியை கழற்ற வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்தும் அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எஸ்.எப்.ஐ, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநில துணை பொதுசெயலாளர் யு.கே சிவஞானம் நேற்று முதுமலை யானைகள் முகாமில் சென்ற வனத்துறை அமைச்சர் அங்குள்ள பழங்குடி இளைஞர் ஒருவரை அழைத்து காலனியை கலட்டுமாறு கூறிய வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்று தெரிவித்தார். எனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இன்று அவர் அந்த மாணவரிடம் அவர் குடும்பத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது ஒருபுறம் இருப்பினும் நேற்று நடந்து கொண்டது அவர் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினரை எவ்வாறு எண்ணி இருக்கிறார் என்ற அவரது மன நிலையையே காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் முன்னிலையில் ஆண்டுக்கு ஒருமுறை வன்கொடுமை தடுப்பு அமல்படுத்தும் கூட்டம் நடைபெறாமல் இருப்பதன் விளைவே நாட்டில் நடக்கும் வன்கொடுமை சம்பவங்கள் என்று கூறினார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.