கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை செல்ல நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை.
தற்போது உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பால பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ள நிலையில், அதன் கீழ் சாலைகளை புதுப்பித்து நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் செல்வதற்கு இன்றிலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல புட்டுவிக்கி பாலம் வழியாக 6 கிலோமீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். ஆனால் இனிமேல் எளிதாக மேம்பாலத்தின் கீழ் சென்று விடலாம். இதனால் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
தற்போது திறந்துவிடப்பட்டுள்ள சாலை ஒரு வழிப்பாதை. ஆனால் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வரும் மக்கள் சிலர் உக்கடம் குளத்தையொட்டி போடப்பட்டுள்ள வழியை விட்டுவிட்டு இதே பாதையில் வருகின்றனர். இருவழியாக வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அனுமதியின்றி மலைப்பாதையில் சென்ற18 சக்கர லாரி: பறிமுதல் செய்த காவல் துறை!