கேரளா எல்லைப் பகுதிகளில் இருந்து கோயம்புத்தூரில் உள்ள நவக்கரை, மதுக்கரை ஆகிய இடங்களுக்கு லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று (மார்ச். 08) இரவு கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த மதுக்கரை மக்கள், காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, லாரி ஓட்டுநர் சாமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் ஊடுருவியுள்ள நிலையில், அங்கிருந்த மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இலவச மாடுகள் வழங்குவதில் முறைகேடு - பொதுமக்கள் குற்றச்சாட்டு