கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி நகர் பகுதியில், தடுப்பூசி போடும் மையம் மிகக் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (மே.29) பொள்ளாச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள நாச்சிமுத்து கவுண்டர் பிரசவ விடுதியில், பொள்ளாச்சி நகர் பகுதி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று சமூக வலைதளங்களில் தவறுதலான செய்தி வந்துள்ளது.
இதை நம்பிய பொள்ளாச்சி நகர் பகுதி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனை சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் கட்டுப்படுத்துவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இறுதியாக மிகக் குறைந்த அளவே மருந்துகள் வந்துள்ளது என்று டோக்கன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு மீதமுள்ள பொதுமக்களை கலைந்து போகும்படி சுகாதாரத்துறை அலுவலர்கள் ஒலிப்பெருக்கியில் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் சிலர் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நாளை (மே:30) முதல் பொள்ளாச்சியில் வார்டு வாரியாக தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் வரவேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். இந்த அறிவிப்பின் பின்பும் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் அப்படியே இருந்ததால், பொள்ளாச்சி மத்தியப் பேருந்து நிலையம் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'மாதவிடாய் காலத்திலும் மிருகத்தனமாக நடந்து கொள்வார்' - முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை புகார்