கோவையில் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக ஏற்கனவே இரண்டு தனியார் மருத்துவமனைகள் குறித்து முந்தைய மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் குறித்துப் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரிக்க மூன்று இணை இயக்குநர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அதன் அறிக்கையை புதிய மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
கரோனாவுக்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டணங்களை, அரசு அறிவித்துள்ள தொகையைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இதுவரை 50 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், புகார்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குப்படுத்துதல் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இருந்த இடத்திலிருந்தே புகார் அளிக்கலாம், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்!