கோவை மாநகரில் சாலைகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும், அரசு கூறியதை மீறி குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை அதற்கென்று மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் எனவும், குப்பைகளைக் கொட்டுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஆட்டோமொபைல் கடைக்காரர் ஒருவர் தடை விதிக்கப்பட்ட இடத்தில் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் அந்தக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இதுபோன்று குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதையும் மீறினால் கடையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.