ETV Bharat / state

ஆயிரமாண்டுகள் பழமையான 'பதிமலை குகை' ஓவியங்களைப் பாதுகாக்க மக்கள் கோரிக்கை!

கோவை: அழிந்து வரும் நிலையில் உள்ள 'பதிமலை குகை' ஓவியங்களைப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

pathimalai
author img

By

Published : Nov 8, 2019, 12:07 AM IST

கோவை மாவட்ட வனப்பகுதிகளுக்கு இடையே உள்ள பாலக்காட்டு கணவாய் என்பது தமிழக - கேரளாவை இணைக்கும் வழித்தடமாகவும், யானைகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. மேலும் இந்தப் பகுதி முன்னொரு காலத்தில் யானைகளை பழக்கப்படுத்தி விற்கும் சந்தையாகவும் இருந்துள்ளது. அந்த வரலாற்றுத் தொடர்புகள் கோவை குமிட்டிபதி அருகே பதிமலையில் குகை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும்.

வெண்மையான திரவியத்தைக் கொண்டு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தில் யானை ஒன்றின் மீது பாகன் அமர்ந்து செல்லும் காட்சியும், அதனைச் சுற்றி பெரிய பெரிய குறுக்கும் நெடுக்குமாக பல கோடுகளும் வரையப்பட்டுள்ளன. மேலும் தேரை முன்னும் பின்னும் வடம்பிடித்து மனிதர்கள் செல்லும் காட்சியும் அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பழங்கால மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை எதிர்கால சந்ததிக்குத் தகவலாக தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியம் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

காக்கப்பட வேண்டிய பதிமலை குகை ஓவியங்கள்

இத்தகைய பழமை வாய்ந்த இந்த ஓவியங்கள் தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இதற்குக் காரணம் மலைப் பகுதிக்குச் செல்லும் சிலர் குகைக்குள் அடுப்பு மூட்டி சமைப்பதும், அங்கே மது அருந்திவிட்டு குகையில் உள்ள ஓவியங்களை சேதப்படுத்துவதும்தான் என்று கூறப்படுகிறது.

குகை ஓவியங்கள் பலவும் எளிதில் பார்க்க முடியாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் நிலையில், குமிட்டிபதி பதிமலை ஓவியங்கள் எளிதில் பார்க்கும் வகையில் உள்ளது. ஆனால் தற்போது அந்த இடம் மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் இருப்பது வேதனையளிக்கிறது. இதை தொல்லியல்துறை புனரமைத்து பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமையான இந்த குகை ஓவியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவுள்ளது.

Intro:Body:

Intro:கோவை அருகே உள்ள அழிந்து வரும் குகை ஓவியங்களை பாதுகாக்க வேண்டுமென பொதுமக்களும் தொல்லியல் துறை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு...

Body:கோவை மாவட்ட வனப் பகுதிகளுக்கு இடையே உள்ள பாலக்காட்டு கணவாய் என்பது தமிழக கேரளாவை இணைக்கும் யானை வழித்தடமாகவும்,யானைகளின் வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. மேலும் இந்த பகுதி  முன்னொரு காலத்தில்  யானைகளை பழக்கப்படுத்தி, விற்கும் சந்தையாகவும்  இருந்துள்ளது. அந்த வரலாற்று தொடர்பு கோவை அருகே உள்ள  குமிட்டிபதி பதிமலை குகை ஓவியங்கள் ஆகும். வெண்மை நிறத்தை கொண்டு வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில் யானை ஒன்றின் மீது பாகன் அமர்ந்து செல்லும் காட்சியும் அதனை சுற்றி பெரிய பெரிய குறுக்கும் நெடுக்குமாக பல கோடுகள் உள்ளன மேலும் தேரை முன்னும் பின்னும் வடம்பிடித்து மனிதர்கள் செல்லும் காட்சியும் அங்கு ஓவியமாக வரையப்பட்டுள்ளது.இது அங்கு நடைபெற்ற சம்பவங்களை தெரியப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது. பழமையான இந்த ஓவியங்கள் தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இதற்கு காரணம் மலைப் பகுதிக்கு செல்லும் சிலர் குகைக்குள் அடுப்பு மூட்டி சமைப்பதும் அங்கே மருந்து அருந்திவிட்டு குகையில் உள்ள ஓவியங்கள் சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. தீ மூட்டுவதால்  ஓவியங்கள் முழுவதையும் புகை சூழ்ந்து மெல்ல மெல்ல ஓவியங்கள் மறைய துவங்கியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ஓவியங்களை புனரமைக்கவும் பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும்  வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சமூக செயல்பாட்டாளர் மணிகண்டன் கூறுகையில் பதி மலையிலுள்ள  ஓவியங்கள் வரலாற்றை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது எனவும் இதனை யாரும் கண்டு கொள்ளாததால் அங்கு செல்லும் சிலர் தீ மூட்டி கரியால் அங்கு எழுதி ஓவியத்தை சேதப்படுத்தி வருகின்றனர். உடனடியாக தொல்லியல் துறை தலையிட்டு அந்த குகையை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ஆனந்த் கூறுகையில் கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் வேலந்தாவளம் என்ற இடத்தில் யானை சந்தை நடைபெற்றது  அதனை குறிக்கும் வகையில் பதில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது எனவும் பழங்காலத்தில் யானைகளை பிடிக்க மாவுதம்பதி வனப்பகுதியில் கொப்பம் என்ற குழிகளை ஏற்படுத்தி யானைகளைப் பிடித்து பழக்கப்படுத்தி பின்னர் பதிமலை அருகே உள்ள வேலந்தாவளம் யானை சந்தையில் விற்று வந்துள்ளதாக வரலாறுகள் உள்ளது எனவும், அதனை குறிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் உள்ளதாகவும், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இந்த பதிமலை ஓவியங்களை பாதுகாக்க மத்திய தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போது அந்த ஓவியங்களை சிலர் சேதப்படுத்தி வருவதாகவும் அவ்வாறு சேதப்படுத்தாமல் இருக்க அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் குகை ஓவியங்கள் பலவும் எளிதில் பார்க்க முடியாத வகையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் நிலையில் குமிட்டிபதி பதிமலை ஓவியங்கள் எளிதில் பார்க்கும் வகையில் உள்ளது எனவும் தெரிவித்த அவர் தற்போது அந்த இடம் மது அருந்தும் இடமாகவும் சமூகவிரோத செயல்கள் நடைபெறும்  இடமாகவும் இருக்கிறது இதை தொல்லியல்துறை புனரமைத்து பாதுகாத்தால் வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கும் தொல்லியல் துறை மாணவர்களுக்கும் பயனளிக்கும் என தெரிவித்தார்.

Conclusion:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.