ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் காங். கூட்டணி அமோக வெற்றி பெறும்- சஞ்சய்தத் உறுதி - சஞ்சய்தத் உறுதி

கோவை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய்தத்
author img

By

Published : Apr 27, 2019, 11:03 PM IST

கோவை மாவட்டம், கருத்தம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக அமர செய்வோம் என மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாடு முழுவதும் ராகுல்காந்தி அலை வீசி வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். அதேபோல் ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பதும் உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

சு.சீனிவாசன்.       கோவை

நாடு முழுவதும் ராகுல்காந்தி அலை வீசி வருகிறது.  நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கோவையில் தெரிவித்துள்ளார் .

 கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி  இடை தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் சூலூர் தேர்தல் பணிக்குழு கூட்டம் கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியல் நடைபெற்றது.காங்கிரஸ் கட்சியின் கோவை வடக்கு தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர்,முதன் முதலாக ராகுல் காந்தியை பிரதமராக அமர செய்வோம் என மேடையில் பேசிய தி.மு.க.தலைவர் ஸ்டாலினுக்கு எமது நன்றியை தெரிவிப்பதாகவும்,  நாடு முழுவதும் ராகுல்காந்தி அலை வீசி வருகிறது.  நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். ராகுல்காந்தி பிரதமராக பதவி ஏற்பது உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக நேற்று திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தபோது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அழைக்காமல்  சென்றதாகவும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் செல்வதில்லை  என சமூக வலைதளங்களில் சூலூர் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் பதிவு செய்திருந்தனர் இது தொடர்பாக பேசிய சஞ்சய்தத் கூட்டணி கட்சிகளுக்குள்  சில மனஸ்தாபங்கள் ஏற்படும் ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது திமுக வேட்பாளர் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியினர் முழுமனதோடு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் .

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.