கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேர்வராயன்பாளையம், குமாரபாளையம், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் 35 ஏக்கருக்கு மேல் பந்தல் காய்கறி, பீர்க்கங்காய் சாகுபடி செய்து வருகின்றனர். பீர்க்கங்காய் 90 நாள் பயிர் என்பதால் 45 நாள்கள் விளைச்சலிற்காகவும், 45 நாள்கள் அறுவடை செய்தும் வருகின்றனர்.
தற்போது வைரஸ்களும், பூஞ்சை தாக்கி காய்கள் பிஞ்சு நிலையிலேயே அழகி அறுவடை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் பல்வேறு மருந்துகளை பயன்படுத்தி வரும் சூழ்நிலையில், தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் மழையால் மருந்துகள் கரைந்து, நோயை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
பருவமழை மாற்றங்கள் நிகழும் போதும் ஏதாவது ஒரு நோய் தாக்கப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது ஒரு கிலோ பீர்க்கங்காய் 25 ரூபாய்க்கு விற்கும் சூழலில், இதுபோன்ற நஷ்டத்தை விவசாயிகள் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள், இந்த நோய் பாதிப்பு காரணங்களினால் ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுவதாகவும், பந்தல் சாகுபடி செய்ய அரசு சார்பில் மானிய விலையில் விதை மற்றும் மருந்துகள் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சர்!