ETV Bharat / state

ப. சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறவினர் கொலை வழக்கில், கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

p-chidambaram-cousin-murder-case-4-person-sentenced-to-life-imprisonment-for
ப. சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
author img

By

Published : Oct 9, 2021, 1:04 PM IST

கோவை: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியுடைய தங்கையின் மருமகன் சிவமூர்த்தி(47). திருப்பூர் கருமாரம்பாளையம் பகுதியை சேர்ந்த இவர், பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவந்தார். இவருடைய மனைவி துர்கா வைஷ்ணவி. இவர்களுக்கு 3 வயதில் மகள், ஒன்றரை வயதில் மகன் உள்ளனர்.

2018ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி சிவமூர்த்தி கோவைக்கு சென்றுவருவதாக வீட்டில் கூறிவிட்டு அவரது சொகுசு காரில் புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இரவு அவர் வீடு திரும்பவில்லை என அவருடைய தந்தை சின்னசாமி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், "ஜூன் 26ஆம் தேதி இரவு அவரது கார் கிருஷ்ணகிரி, வாணியம்பாடி சோதனைச் சாவடிகள் வழியாக கடந்துசென்றது கண்டறியப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் காவலர்களுக்கு திருப்பூர் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

P. Chidambaram cousin murder case  4 person sentenced to life imprisonment for
கோவை நீதிமன்றம்

குற்றவாளிகள் வாக்குமூலம்

ஆம்பூர் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் ஜூன் 27ஆம் தேதி வெங்கிளி என்ற இடத்தில் நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக வந்த சிவமூர்த்தியின் காரை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கோவை மாவட்டம் காரமடை பகுதியை சேர்ந்த விமல் (35), கவுதமன் (22), மணிபாரதி (22) என்பது தெரியவந்தது.

3 பேரையும் ஆம்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, ரூ. 50 லட்சம் கேட்டு தொழில் அதிபர் சிவமூர்த்தியை கடத்திச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பிணத்தை 2 நாள்களாக காரிலேயே வைத்து சுற்றிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் கல்லைக் கட்டி வீசிச்சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காவலர்கள் கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிவமூர்த்தியின் உடலை மீட்டனர். சிவமூர்த்தியின் கை, கால் மற்றும் முகம் ‘டேப்பால்’ சுற்றப்பட்டு இருந்தது. உடலோடு ஒரு மைல்கல்லும் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூர்த்தி (35) என்பவரையும் திருப்பூர் காவலர்கள் காரமடையில் பிடித்தனர்.

சுற்றுலா செல்வோம் எனக்கூறி போடப்பட்ட ஸ்கெட்ச்

கைதானவர்களில் ஒருவரான விமல் திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு ஆர்டர் பெற்றுக்கொடுக்கும் ஏஜெண்ட் அலுவலகம் நடத்தி வந்தார். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிவமூர்த்திக்கும், விமலுக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இருவரும் சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு விமலுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனில் சிக்கித் தவித்துள்ளார். அப்போது, பணம் கொடுத்து உதவுமாறு சிவமூர்த்தியிடம் விமல் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிவமூர்த்தியிடம் அதிக பணம் இருப்பது தெரிந்த விமல், அவரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார். இதற்காக தனக்கு தெரிந்த மூர்த்தி(35) மற்றும் கட்டிட தொழிலாளிகளான மணிபாரதி(22), கவுதமன்(22) ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு உல்லாசப் பயணம் போகலாம் என சிவமூர்த்தியிடம் விமல் கூறியுள்ளார். இதை நம்பிய அவரும் ஜூன் 25ஆந் தேதி காலை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே நின்றுகொண்டிருந்த விமலை காரில் ஏற்றிக்கொண்டார்.

கொலை நடந்த விதம்

அப்போது காரமடை அருகே உள்ள குறுந்தமலை கோயிலுக்கு அவர்கள் சென்றனர். அங்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி மணிபாரதி, கவுதமன், மூர்த்தி ஆகியோர் நின்றிருந்தனர். அவர்களை மேட்டுப்பாளையத்தில் இறக்கிவிடுமாறு விமல் கூறியதன்பேரில், 3 பேரையும் காரில் ஏற்றிக்கொண்டனர்.

சிறிது தூரம் காட்டுப்பகுதியில் சென்றதும் சிவமூர்த்தியை காரில் இருந்த 4 பேரும் சேர்ந்து அடித்து தாக்கினர். அவரை கட்டிப்போட்டு மிரட்டி சிவமூர்த்தியின் தந்தையிடம் ரூ.50 லட்சம் பறிக்க திட்டமிட்டனர். அதில், ரூ.25 லட்சத்தை விமலும், மீதமுள்ள பணத்தை மற்ற 3 பேரும் சேர்ந்து பிரிக்கவும் திட்டமிட்டு இருந்தனர். அதன்படி பணம் கேட்டு சிவமூர்த்தியை விமல் மிரட்டினார்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சிவமூர்த்தி சத்தம் போட்ட நிலையில் அவருடைய முகத்தில் அட்டைப்பெட்டிகள் ஒட்ட பயன்படுத்தும் ‘டேப்பால்’ சுற்றினர். பின்னர் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கி உயிரிழந்துள்ளார். சிவமூர்த்தியிடம் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்து மூர்த்தியிடம் ரூ.40 ஆயிரம் கொடுத்து அவரை காரமடையில் இறக்கிவிட்டு, எஞ்சிய பணத்துடன் மற்ற 3 பேரும் காரில் சடலத்துடன் சுற்றி வந்தனர்.

வழக்கின் தீர்ப்பு

ஜூன் 25ஆம் தேதி மாலை சென்னை செல்வதற்காக தாம்பரம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஓசூர் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு சென்று சிவமூர்த்தியின் உடலோடு ஒரு மைல்கல்லை எடுத்து கட்டி அணைக்குள் வீசினர். அங்கிருந்து காரில் வந்தபோதுதான் 3 பேரும் சிக்கியதாக காவலர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மொத்தமாக 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. வழக்கின் விசாரணை முடிந்து நேற்று (அக்.8) தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், வழக்கில் கொலை குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கட்சி உயிரோட்டமாக இருக்கிறது- கார்த்தி சிதம்பரம் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.