கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பொள்ளாச்சி அரசம்பாளையத்தில் விளைநிலங்களுக்கு நடுவே உள்ள கல்குவாரியில் எம்.சாண்ட் செயற்கை மணல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
அதனால் அப்பகுதி விவசாயிகள், "எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்தால் அதிலிருந்து வெளியேறும் புகை, தூசி, மணல் சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னை, சாகுபடிப் பயிர்கள் உள்ளிட்டவை மீது படர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தொழிற்சாலை அமைக்கும் பணியைக் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக அந்தக் கல்குவாரியில் பாறைகளை உடைக்க வெடிகள் வெடித்துவருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: விவாசாயி வாக்குவாதம்: உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தாமதம்