உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இதனால் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு வருவதால் மேட்டுப்பாளையம்-ஊட்டி ரயில் சேவை வருகிற நவ.30 வரை ரத்து(Train Service Cancel) செய்யப்பட்டுள்ளது.
இந்த மலை வழி ரயில் பாதை பல உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரசிக்கும் பாதையாக இருந்து வருகிறது.
ரயில் பாதையில் மண் சரிவு:
இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழைப் பெய்து வருகிறது.இப்பெரும் மழையினால்,மேட்டுப்பாளையம் - ஊட்டி ரயில் பாதையில் கல்லாறு, ஹில்குரோவ் ரயில் நிலையங்களின் இடையே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன.
மண் சரிந்து ரயில் பாதை மூடியது. பின், ரயில் பாதையை சீரமிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இதனால்,கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் நவ.15 வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
மீண்டும் மண் சரிவு:
இதற்கிடையில்,மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பொழிவதால், ரயில் பாதையில் ஆங்காங்கே மீண்டும், மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு, நவ.30 வரை மீண்டும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:Nallamma Naidu passed away: ஜெ. சொத்து குவிப்பு வழக்கு விசாரணை