ETV Bharat / state

1 ரூபாய்க்கு இட்லி கொடுக்கும் கோவை பாட்டி - கெளரவித்த மாவட்ட ஆட்சித்தலைவர்! - 1 ரூபாய்க்கு இட்லி கொடுக்கும் மூதாட்டி

கோயம்புத்தூர் : வடிவேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, அப்பகுதியில் இட்லியை ஒரு ரூபாய்க்கு கொடுத்து வருகிறார். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

மூதாட்டியை கெளரவிக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்
author img

By

Published : Sep 10, 2019, 8:50 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கமலாத்தாள்(85). இவர், தனது முதுமைப்பருவத்திலும் அப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக சிறிய உணவகம் நடத்தி வருகிறார். குறிப்பாக, ஒரு இட்லியை ரூ.1க்கு விற்பனை செய்து வருகிறார். ஒரு ரூபாய் இட்லி என்றால் இன்றைக்கு உலகமே தெரியுமளவுக்கு கமலாத்தாள் பாட்டியின் புகழ் பரவி இருக்கிறது.

மூதாட்டியை கெளரவிக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்
மூதாட்டியை கெளரவிக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்

அதில் அவர், முதல் 15வருடங்கள் இட்லியை 50 பைசாவுக்கும், அதன் பிறகு 15 வருடங்களாக இட்லியை 1 ரூபாய்க்கும் மக்களுக்கு விற்பனைக்கு கொடுத்து வருகிறார். வீட்டிற்கு வாங்கிச்செல்ல பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார். பாட்டியின் சுவையான இட்லிக்கு அப்பகுதியைச் சுற்றியுள் ஊர்களில் இருந்து தினமும் அதிக பேர் வந்து செல்கின்றனர். பாட்டிக்கு ஆதரவாக அவரது பேரன் புருஷோத்தமன் இருந்து வருகிறார்.

ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பிடிக்கும் கமலாத்தாள் பாட்டி.

பின்பு, இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி, கமலாத்தாளை தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து, அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்தினார். பின்பு, தனது வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதாக கூறிய பாட்டிக்கு, மாவட்ட ஆட்சியர் பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டித்தரப்படும் எனவும், தேவையான உதவிகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Intro:ஒரு ரூபாய்க்கு கடந்த 30 வருடங்களாக இட்லி கொடுக்கும் கமலாத்தாளை கெளரவித்த மாவட்ட ஆட்சித்தலைவர்..
Body:

கோவை மாவட்டம் ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான கமலாத்தாள் தனது முதுமைப்பருவத்திலும் அப்பகுதியில் இட்லியை குறைந்த விலைக்கு கொடுத்து வருகிறார். ஒரு ரூபாய் இட்லி என்றால் இன்றைக்கு உலகமே தெரியுமளவுக்கு கமலாத்தாள் பாட்டியின் வரலாறு பரவி இருக்கிறது. முதல் 15 வருடங்கள் 50 பைசாவுக்கும் , அதற்கு பிறகு 15 வருடங்களாக 1 ரூபாய்க்கும் இட்லி கொடுத்து வருகிறார். வீட்டிற்கு வாங்கிச்செல்ல பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார். பாட்டியின் சுவையான இட்லிக்கு வடிவேலம்பாளையத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டருக்குள் இருக்கும் ஊர்களில் இருந்து தினமும் நிறைய பேர் வந்து செல்கின்றனர். பாட்டிக்கு ஆதரவாக அவரது மகளது மகன் புருசோத்தமன் இருந்து வருகிறார். பாட்டியை பற்றி தொடர்ந்து வந்த செய்திகளால் பாட்டியின் வீட்டிற்கே சென்று நிறைய தொழிலதிபர்கள் வாழ்த்தி செல்கின்றனர். அவருக்கு பொருள் உதவியும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கமலாத்தாள் பாட்டியை தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்த மாவட்ட ஆட்சியர் கு ராசமணி அவரது சேவையை பாராட்டி வாழ்த்தினார். வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதாக பாட்டி கூறியதை கேட்ட ஆட்சியர் பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்படும் எனவும், தேவையான உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தான் இறந்தால் ஆகும் செலவை செய்ய யாரும் இல்லை எனவும், தனது மகள் மற்றும் அவரது கணவன் இறந்த நிலையில் அவர்களது மகனான புருசோத்தமனுடன் வாழ்ந்து வருவதாக கமலாத்தாள் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வடிவேலம்பாளையத்தில் இட்லி பாட்டி ஓடி முதல் பரிசை தட்டிச்சென்ற வீடியோ தற்போது அப்பகுதி இளைஞர்களால் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கமலாத்தாள் பாட்டி ஒரு கையில் சொம்புடன் தனக்கு பின்னால் வருபவரை வேகமாக ஓடச்சொல்லி, அவர் வேகமாக ஓடுவதும் , வெற்றி அடைந்த பின்பு ஒரு குழந்தையை போல் சிரித்து மகிழும் வீடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.