கோவை மாவட்டம், இருகூர் அருகே செல்லும் சேலம்-கொச்சி புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இங்கு இன்று அதிகாலையில் பெங்களூருவில் இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் டிபார்மெண்டல் ஸ்டோருக்கு பழங்களை ஏற்றி வந்த லாரியும், சேலத்திற்கு வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின.
அப்போது இரண்டு லாரிகளும் பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் உருண்டு ரயில்வே தண்டவாளத்திற்கு அருகே விழுந்தன. அதில் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநரான கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெயஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழம் ஏற்றி வந்த லாரியின் ஒட்டுநர் ராகவேந்திரா என்பவர், லாரியில் இருந்து குதித்து தப்பியதால், காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து, ராகவேந்திரா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிகாலையில் அதிவேகமாக வந்த இரண்டு லாரிகளும் மோதி விபத்துள்ளாக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். லாரிகள் இரண்டும் ரயில்வே தண்டவாளத்தில் விழாத காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
.