ETV Bharat / state

75ஆவது சுதந்திர தினம்: தபால் நிலையங்களில் ரூ.25 கொடுத்து தேசியக்கொடியை வாங்க ஏற்பாடு! - 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் நிலையங்களில் ரூ.25 கொடுத்து தேசியக் கொடியை பெறலாம்

author img

By

Published : Aug 4, 2022, 8:53 PM IST

கோவை: 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதையொட்டி ஆகஸ்ட் 13,14,15 ஆகிய 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதனையடுத்து தேசியக்கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தேசியக்கொடிகளை தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்செட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் உட்பட கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

சாட்டின் வகை துணியில் தைக்கப்பட்ட தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் தபால் நிலைய அலுவலக நேரங்களில் இதனை வாங்கிக் கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இனி வாட்ஸ்அப் குரூப் அட்மின்களே மெசேஜ்களை 'Delete For Everyone' செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.