ETV Bharat / state

கோவையில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து!

கோயம்புத்தூர் காந்திபுரம் அருகே அரசு சொகுசு பேருந்தின் பின்புறம் தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் ஓட்டுநர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

கோவையில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதல்!

author img

By

Published : Feb 27, 2023, 10:44 AM IST

கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் இன்று (பிப்.27) காலை அரசு குளிர்சாதன சொகுசு பேருந்து ஒன்று சக்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அதேநேரம் அரசு பேருந்தின் பின்னால் தனியார் ஆம்னி பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இரண்டு பேருந்துகளும் காந்திபுரம் கிராஸ்கட் சாலை சந்திப்பின் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகத் தனியார் ஆம்னி பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மோதியது.

இதில் அரசு பேருந்து, அருகிலிருந்த ஒரு கடை கட்டடத்தில் இடித்து நின்றது. இதனால் அந்த கடையின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஆகியவை சேதமடைந்தது. அதேநேரம் இந்த விபத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் 2 ஓட்டுநர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டது. மேலும் அந்த கடைக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த நபர், பேருந்துகள் மோதிய சத்தம் கேட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.

கோவையில் அரசு பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் உருக்குலைந்த கடை

இதனால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்து காரணமாக இரண்டு பேருந்துகளிலும் கண்ணாடிகள் உடைந்தன. அதேநேரம் விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் கோர விபத்து; குழந்தை உட்பட 5 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.