உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷி பகுதியைச் சேர்ந்தவர் சோனு (23). இவரது நண்பர்கள் நசீர் (27), சம்சேத் (28). இவர்கள் மூன்று பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் அருகே தங்கி, கிடைக்கும் வேலைகளை செய்துவந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை இவர்கள் வசித்துவந்த பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமி சத்தம் போட்டதால் அப்பகுதியில் உள்ள மக்கள், மூன்று பேரையும் பிடித்து அடித்து போத்தனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு விசாரணை மாற்றப்பட்டது. பிடிபட்ட மூன்று இளைஞர்களிடம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை அளித்த சோனு மீது போக்ஸோ வழக்கும், மற்ற இருவர் மீது அதற்கு உடந்தையாக இருந்ததற்கான வழக்கும் போடப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க... 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது