ETV Bharat / state

மழையில்லாததால் பொள்ளாச்சி இளநீர் ஏற்றுமதி பாதிப்பு!

பொள்ளாச்சி: போதிய மழையில்லாத காரணத்தால் இளநீர் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

File pic
author img

By

Published : May 14, 2019, 8:25 AM IST

பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடியாகும். இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை, செவ்விளநீர் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேர்த்துமடை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. இளநீர் வரத்து முற்றிலும் குறைந்ததால் இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இளநீர்

இதனால் வெளிமாநிலத்தில் இருந்து இளநீர் வாங்க வரக்கூடிய வியாபாரிகள் வராததால் முற்றிலும் ஏற்றுமதி முடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் மழையில்லாத காரணத்தால் இளநீர் உற்பத்தி பாதிப்பு - இளநீர் தட்டுப்பாட்டால் இளநீர் விலை உயர்வால் ஏற்றுமதி செய்வதில் சிக்கல், வியாபாரிகள் கவலை.

பொள்ளாச்சி -மே,13 

பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது நீண்ட நாள் சாகுபடிக்கான தென்னை சாகுபடியாகும், பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்இளநீர் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா,கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, நாளொன்றுக்கு பொள்ளாச்சியில் இருந்து மட்டும் 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்தனர், இத்தொழிலை நம்பி  நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 3 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட தொழிலாளர்களும் பயன் பெற்றுள்ளனர், இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், சேர்த்துமடை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது, மேலும் கேரளா வாடல் நோய் போன்ற காரணங்களால் இளநீர் உற்பத்தி மிகவும் பாதிப்படைந்துள்ளது, இதனால் இளநீர் வரத்து முற்றிலும் குறைந்ததால் இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, விவசாயிகளிடமிருந்து ஒரு இளநீர் 28 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து, வாகனம், இளநீரை ஏற்றுவது போன்ற செலவு காரணமாக ஒரு இளநீர் 40 ரூபாயில் இருந்து 45 ரூபாய் வரை விற்பனை செய்வதால் வெளிமாநிலத்தில் இருந்து இளநீர் வாங்க வரக்கூடிய வியாபாரிகள் வராததால் முற்றிலும் ஏற்றுமதி முடங்கியுள்ளது, தற்போது தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் இளநீர் ஏற்றுமதி செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர், நாளொன்றுக்கு பொள்ளாச்சியில் இருந்து மட்டும் 2 லட்சம் வரை இளநீர் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு லட்சம் இளநீர் மட்டுமே ஏற்றுமதி செய்ய கடுமையாக போராட வேண்டி இருப்பதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர், இந்த இளநீர் பறிப்பு தொழிலை நம்பியுள்ளார் சுமார் மூவாயிரம் கூலித் தொழிலாளர்களும் தற்போது வேலை இல்லாமல் இருப்பதாகவும், ' தொழிலாளர்கள் தெரிவித்தனர் தற்போது தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில் மக்களுக்கு இளநீர் தேவை அதிகரித்து வருவதாகவும், எனவே தட்டுப்பாடு காரணமாக இளநீர் ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு காணப்படுவதால் வியாபாரிகள் செய்வதறியாமல் இருந்துவருகின்றனர் .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.