ETV Bharat / state

'விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை' - நடிகர் விஷால் - விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை

விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்
author img

By

Published : Dec 15, 2022, 9:07 AM IST

கோயம்புத்தூர்: விஷால் நடிப்பில் வெளியாக உள்ள "லத்தி" திரைப்படத்தின் டிரைலர் இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று (டிச.14) வெளியீடு செய்யப்பட்டது. டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், முதல்முறையாக கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்துள்ளேன். விவசாயிகள் பற்றி சரியான படம் யாரும் எடுத்ததில்லை. பிரச்சனையை சொல்வதை விட தீர்வு சொல்ல வேண்டும். உதயநிதி சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்துள்ளார் என கூறினார்.

பல வருடங்களுக்கு பின்பு தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என தெரிவித்து,
உதயநிதி அமைச்சராகியது மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன படங்களை தான் ஓடிடியினர் வாங்குகிறார்கள். டிஜிட்டல் படங்கள் வரும் என கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். சிறிய முதலீட்டை வைத்து படம் எடுப்பதை தவிர்க்கலாம். சிறிய திரைப்படங்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன என தெரிவித்தார்.

மக்கள் சினிமா தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தான் தாங்கள் முயற்சி செய்வோம். ஓடிடி பிளாட்பார்ம் ஆல் சினிமா துறைக்கு பாதிப்பு வந்துள்ளது. சினிமாத்துறைக்கு ஜிஎஸ்டி விதித்தது மிக அதிகம். சூதாட்டத்தையும் சினிமா துறையும் ஒரே இலக்காவில் வைத்துள்ளனர் என கூறினார்.

இலங்கை முகாமில் ப்ரொஜெக்டர் வைத்து இந்த படத்தை காட்ட கோரிக்கை வைப்பேன். அவர்களுக்கு திரையிட்டு காட்டுவதில் என்ன தவறு உள்ளது. மிஸ்கின் உடன் தயாரிப்பாளராக பிரச்சனை. எனக்கு நடந்த துரோகத்தை மறக்க மாட்டேன். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் விவசாயிகளுக்கு தான் கொண்டு சேர்ப்பேன் என்றார்.

மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு கட்டடத்திற்கு பின்பு தான் கல்யாணத்தை பற்றி யோசிப்பேன் என வழக்கம்போல் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' கம்பேக் கொடுத்த பாரதிராஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.