மக்கள் பலரும் உணவை வீணாக்கி வருகின்றனர். அதை தடுக்கும் வண்ணம் ‘நோ புட் வேஸ்ட்’ எனும் உணவு சேகரிக்கும் வாகனம் ஒன்று சுப நிகழ்ச்சி நடைபெறும் மண்டபங்களில் மிச்சமாகும் உணவை சேகரித்து அதை இல்லாதவர்களுக்கு வழங்கிவருகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி தற்போதுவரை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று இந்த நிறுவனத்திற்கு மேலும் ஒரு வாகனத்தை மக்கள் சேவை மையத்தின் சார்பில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதை வீணாக்குவது மிகவும் கஷ்டமான விஷயம். அதனால் இது போன்ற தொண்டு நிறுவனங்கள் உணவை சேகரித்து உணவு இல்லாத மக்களுக்கு அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க...ரத்தானது பொதுத் தேர்வு - குதூகலத்தில் மாணவர்கள்..!