ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு: 2ஆவது நாளாக தொடரும் என்ஐஏ விசாரணை! - Crime report

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அலுவலர்கள் இன்று 2ஆவது நாளாக கோவையில் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு: 2வது நாளாக தொடரும் என்ஐஏ விசாரணை!

author img

By

Published : Dec 26, 2022, 3:59 PM IST

கோவை கார் வெடிப்பு: 2வது நாளாக தொடரும் என்ஐஏ விசாரணை!

கோயம்புத்தூர்: உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த அக்.23ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடத்தப்பட்ட காவல் துறையினரின் விசாரணையில், இது பயங்கரவாத தாக்குதல் என்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கை தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதனிடையே கடந்த 21ஆம் தேதி பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய 5 பேரை மட்டும் என்ஐஏ அலுவலர்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் 5 பேரிடமும் 9 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மூன்று நாட்களாக சென்னையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று (டிச.25) முதல் கோவையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக நேற்று உக்கடம் புல்லுக்காடு, அல் அமீன் காலனி, ஜி.எம்.நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று (டிச.26) 2ஆவது நாளாக உக்கடம் அன்பு நகர் பகுதிக்கு 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் இலங்கை தேவாலய தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக, கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முகமது அசாருதின் என்பவரது, வீட்டின் அருகில் இந்த 5 பேரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் இந்த 5 பேரில் உயிரிழந்த ஜமேஷா முபின் உறவினரான முகமது அசாருதீனை மட்டும், புரூக்பீல்ட் மால் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதேநேரம் மற்ற நான்கு பேரையும் வேறு பகுதிக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

மாலின் பார்க்கிங் பகுதியில் உள்ள கார் பழுது நீக்கும் நிறுவனத்தில், முகமது அசாருதீன் பணிபுரிந்து வந்த நிலையில், முகமது அசாருதீன் குறித்து அங்கிருந்த நபர்களிடம் என்ஐஏ அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும் 5 பேரையும் தனித்தனியாகவும், ஒரு சில இடங்களுக்கு மொத்தமாகவும் அழைத்துச்சென்ற என்ஐஏ அலுவலர்கள், எந்தெந்த இடங்களில் நின்று பேசினார்கள், யாரிடம் பேசினார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 2022இல் திரும்பிப் பார்க்க வைக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.