ETV Bharat / state

"அறுக்க தெரியாதவரிடம் இரண்டு அரிவாள் போல்.. செந்தில் பாலாஜியின் கதை" - கிருஷ்ணசாமி ஆவேசம்!

அறுக்க தெரியாவர் கையில் இரண்டுவ் அரிவாள் இருப்பது போல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலை இருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
author img

By

Published : May 21, 2023, 9:25 AM IST

கோயம்புத்தூர்: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பெருங்கருணை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதன் அருகில் உள்ள இ.கே.ஆர்.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 22 பேர் மது அருந்தி உயிரிழந்து உள்ளனர்.

இதனை உயிரிழந்தவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்னிடம் முறையிட்டார்கள். மீனவர்கள் வசிக்கின்ற அந்த கிராமத்தைச் சார்ந்தவர்கள் மது விற்பனை செய்யக்கூடாது என்று இருந்தாலும், அரசியல் பின்புலத்தோடு காவல்துறை துணையோடு அந்த பகுதி மக்களுக்கு வேறு கிராமத்தாரால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகத்தான் அங்குள்ள பல்வேறு இளைஞர்கள் மது பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்.

டாஸ்மார்க் மற்றும் அதற்கு இணையாக விற்பனை செய்யப்படும் மது குறித்து பல தகவல் வெளிய வர துவங்கியுள்ளது. சட்டவிரோதமாக அனுமதி இல்லாமல் இரவு 10 மணிக்கு பிறகும் விடிய விடிய மது விற்பனை நடைபெற்றுக் கொண்டுள்ளது. செந்தில் பாலாஜி நான் சொல்லக்கூடிய புள்ளிவிவரம் தவறு என்றார். ஆனால் நான் கூறிய பல லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது என்பதற்கு ஆதாரமாக தான் இகேஆர் குப்பம் சம்பவம் வெளிப்படுத்துகிறது.

22 பேர் உயிரிழந்த நிலையிலும் கூட தற்போது வரை எந்த அமைச்சரும் அந்த கிராமத்தை வந்து சந்திக்கவில்லை. துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பார்க்கவில்லை. 22 பேர் மரணத்திற்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் ஆனால் அவர் விலகவில்லை. விதிமுறைகளுக்கு மாறாக தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ரத்தமும் வியர்வையும் சுரண்டப்படுகின்ற சூழல் இருந்தும் கூட இந்த அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏற்புடையது அல்ல.

உச்ச நீதிமன்றம் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது பல பணியிடங்களுக்கு பணம் பெற்றார் எனத் தெரிவித்தும் கூட செந்தில் பாலாஜி பதவி விலகவில்லை. மேலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் மே 27 ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செந்தில் பாலாஜியை கண்டித்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறும். 2000 ரூபாய் நோட்டுகளை உலகத்திலிருந்து நீக்குவது குறித்தான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என தெரிவித்த அவர் 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது 10 % மட்டும்தான் புழக்கத்தில் உள்ளது அதையும் நீக்குவதற்கு ரிசர்வ் பேங்க் அறிவித்துள்ளது என்றார்.

இதுபோன்ற அறிவிப்புகள் பணக்காரர்களுக்கும் ஊழல்காரர்களுக்கு மட்டுமே பாதிப்புகளையும் பதட்டங்களையும் ஏற்படுத்தும். ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற போது பணக்காரர்கள் எளிதில் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் ஏழை மக்கள் அதனை மாற்றுவதற்கு வெயிலில் நின்று பல இடங்களின் உயிரிழப்புகள் கூட ஏற்பட்டது. 10% புழக்கத்திலுள்ள 2000 ரூபாய் நோட்டால் நாட்டுக்கு என்ன இழப்பு ஏற்படுகிறது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

வங்கிகள் ரிசர்வ் பேங்க் உத்தரவை செயல்படுத்த வேண்டும், வங்கிகள் தவறுதலாக செயல்பட்டால் வங்கி அதிகாரிகள் மீது ரிசர்வ் பேங்க் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி பண மதிப்பிழப்பு செய்வது இந்தியாவின் மதிப்பை குறைத்து விடும் எனவும் இது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மேலும் இது பொருளாதாரத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வியை வைத்து இந்தியா முழுவதும் இதுதான் என சொல்வது ஆளும் கட்சியின் கூற்று. தலைகீழாக நின்னாலும் தமிழ்நாட்டில் கர்நாடகத்தின் முடிவுகள் போல் இருக்காது. 2024ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும். அறுக்க தெரியாதவரிடம் இரண்டு அரிவாள், அதுபோல் செந்தில்பாலாஜியிடம் 2 துறை கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த கட்சிக்கு சென்றால் பதவி இருக்குமோ அங்கு செல்பவர் செந்தில்பாலாஜி. மின்துறையை சரியாக கவனிக்காததால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின் வெட்டுகள் உள்ளது. எனவே செந்தில் பாலாஜியே பதவி விலக வேண்டும். பட்டப்பகல் கொள்ளையன் செந்தில் பாலாஜி. மேலும் செந்தில் பாலாஜி கரூரில் ஜெயித்தவர்.

ஆனால் அவருக்கும் கரூர் மக்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. 44,000 கோடி வருமானம் கொடுக்ககூடிய டாஸ்மார்க் நிறுவனத்தால் நட்ட கணக்கு காட்டப்படுகிறது. விற்பனையில் வெளிப்படையில்லை. பாட்டிலுக்கு 20 ரூ கூடுதலாக வாங்குவதற்கு செந்தில்பாலாஜி விளக்கம் கொடுக்க வேண்டும். மேலும் வருமானவரித் துறை 150 கோடி ரூபாய் டாஸ்மாக் மீது பெனால்டி போட்டுள்ளனர். ஆதலால் மத்திய அரசு இதனை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஜி20 மாநாடு எதிரொலி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் NIA அதிரடி சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.