நெல்லை பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும், ஆயிரக்கணக்கான மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியின் தனியார் இனிப்புக் கடை ஒன்று உள்ளது. அதன் இரண்டாவது மாடியிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எல்லோரும் தள்ளிச் செல்லுங்கள் என்று உரக்க சப்தமிட்டபடி தலைகீழாக குதித்துள்ளார்.
இதனையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஏராளமான மக்கள் இதனை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தனர், தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த முருகன் என்பதும், அவருக்கு கோமதி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது தெரியவந்துள்ளது.