ETV Bharat / state

நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை - கோவையில் மற்றொரு அனிதா? - Neet exam suicide covai

கோயம்புத்தூர்: அடுத்த மாதம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு பயத்தில் மாணவி தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

exam fear
exam fear
author img

By

Published : Aug 19, 2020, 12:52 PM IST

Updated : Aug 19, 2020, 4:01 PM IST

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை உள்ளதால், வருகின்ற செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனா அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் அதற்கு மும்முரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் சுபஸ்ரீ (19) நீட் தேர்விற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் அகாதமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்த நிலையில், தேர்வு குறித்த பயத்தில் தற்கொலையால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவராக வரவேண்டும் என்று கனவு கொண்டிருந்த மாணவி, தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்தை நேரில் சந்தித்து கோவை சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வலுவாக எழுந்தது. தற்போது நீட் தேர்வு பயத்தில் மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஜேஇஇ, நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது : உச்ச நீதிமன்றம்!

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

Last Updated : Aug 19, 2020, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.