ETV Bharat / state

வால்பாறையில் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

கோவை: வால்பாறை பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் திமுக முன்னாள் அமைச்சர் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

author img

By

Published : Mar 29, 2021, 7:08 AM IST

கோவை மாவட்டம், வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகம், போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வால்பாறையில் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்

அப்போது பேசிய அவர், ’’வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக ஆறுமுகம் இருந்துள்ளார். இங்குள்ள எஸ்டேட் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தீர்க்கப்படும். மனித-விலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்த திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவர் எஸ்டேட் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார். வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி திமுகவின் கோட்டையாகும்.

ஆகவே மக்கள் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற செய்ய வேண்டும்” எனக் கூறினார். இந்தப் பரப்புரையின்போது திமுக மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் பாண்டி மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க : அனில் தேஷ்முக் மீது புகார்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.