இந்துக்களின் பண்டிகையான நவராத்திரி விழா முப்பெரும் தேவியரை போற்றும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நவராத்திரி என்றும் மற்ற மாநிலங்களில் தசரா, துர்கா பூஜை என்ற பெயரிலும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒன்பது நாள்கள் நடக்கும் இந்த விழா முதல் மூன்று நாள்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாள்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்வார்கள்.
நவராத்திரி விழாவையொட்டி கோயில்கள், வீடுகளில் 7, 9 படிக்கட்டுகள் அமைத்து பல விதமான பொம்மைகள் அடுக்கப்படும். இந்தாண்டு வரும் 17ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. விழாவை கொண்டாட கொலு பொம்மைகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
கோயம்புத்தூர் பொள்ளாச்சியில் அத்திவரதர், அஷ்டலட்சுமி, வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ஒன்பது வகையான நரசிம்மர் ராமர் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பொம்மைகள் 70 ரூபாயிலிருந்து ஆயிரத்து 300 ரூபாய் வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் சுற்றுலா தளங்கள் திறக்க தடை... ஏமாற்றத்தில் கொடைக்கானல் மக்கள்!