ETV Bharat / state

நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா சிறப்பாக அமையும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா, அனைத்து விவசாய தரப்பினரையும் சென்றடையும் வகையில், சிறப்பாக கொண்டாடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு விழா சிறப்பாக அமையும் - செந்தில் பாலாஜி நம்பிக்கை!

author img

By

Published : Feb 6, 2023, 12:22 PM IST

கோயம்புத்தூர்: கோவில்பாளையம் அருகே வையம்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிறுவனர் நாராயணசாமி நாயுடுவின் 99ஆவது பிறந்தநாள் விழா, இன்று (பிப்.6) அரசு விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த, விவசாயப் பெருமக்களின் தோழனாக அவர்களுடைய கோரிக்கைக்கு முன் நின்று போராடிய நாராயணசாமி நாயுடுவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு விழாவாக கொண்டாடி உள்ளோம்.

பல்வேறு விவசாயத் திட்டங்கள் கொண்டு வருவதற்கு முன்னோடியாக திகழ்ந்த அவரது பிறந்தநாளை, அரசு விழாவாக கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்தப் பகுதியில் அவரது மணிமண்டபத்தில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள்.

அவர் வாழ்ந்த இல்லத்தை நூலகமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். எனவே இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவை நிறைவேற்றப்படும். வருகிற ஆண்டு அவருடைய நூற்றாண்டு. எனவே அனைத்து விவசாய தரப்பினரையும் சென்றடையும் வகையில், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையைப் பொறுத்தவரை, விவசாயிகளின் உந்து சக்தியாக இருந்து, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வென்றெடுக்க முன் நின்றவர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தூண்டில் வளைவுக்கு இல்லாத பாதிப்பு.. பேனா சின்னத்துக்கு வருமா? - அமைச்சர் மா.சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.