ETV Bharat / state

தடையை மீறி ஆர்ப்பாட்டம்: நாஞ்சில் சம்பத் உள்பட 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது

கோயம்புத்தூர்: தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

nanjil sampath with dmk men arrested in kovai

author img

By

Published : Feb 5, 2021, 2:16 PM IST

கோவை குறிச்சி பகுதியில் குளத்தை ஒட்டி பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அங்குள்ள பெரும்பாலானோருக்குத் தனி கழிவறை வசதி இல்லை. அவர்களுக்கு கழிவறை வசதி, குடிநீர் வசதி செய்துதர வலியுறுத்தியும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியைக் கண்டித்தும் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சேனாதிபதி தலைமையில் சுந்தராபுரம் பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாஞ்சில் சம்பத் உள்பட 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது

இதில் கலந்துகொண்ட தலைமைக் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்பட 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வேலுமணியை கண்டித்தும், அதிமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் காவல் துறையினர் நாஞ்சில் சம்பத், சேனாதிபதி ஆகியோரை கைதுசெய்தனர். இதையடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவர்களையும் காவல் துறையினர் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் பொள்ளாச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க... திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் இருமடங்கு துணை மின்நிலையங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.