ETV Bharat / state

காருண்யா நகரான நல்லூர் வயல்: பழைய பெயரை திரும்பித் தர கிராம மக்கள் கோரிக்கை

author img

By

Published : Feb 8, 2021, 2:14 PM IST

கோவை: மத்தவராயபுரம் ஊராட்சியில் உள்ள நல்லூர் வயல் கிராமத்தின் பெயர் அனைத்து அரசு ஆவணங்களிலும் காருண்யா நகர் என மாற்றப்பட்டுள்ள நிலையில் பழைய பெயரையே சூட்ட வலியுறுத்தி ஊர் மக்கள் மனு அளித்துள்ளனர்.

nallur vayal people request to change karunya nagar name

கோவை மாவட்டம் சிறுவாணி சாலை மத்தவராயபுரம் ஊராட்சியில் உள்ள நல்லூர் வயல் கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அம்மனுவில், காருண்யா நகர் என்ற ஊர் பெயரை நீக்கிவிட்டு பழமையான பெயராக இருந்த நல்லூர் வயல் என்ற பெயரையே மாற்றித் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1986ஆம் ஆண்டு அப்பகுதியில் காருண்யா கல்லூரி செயல்படத் தொடங்கியதிலிருந்து அந்தக் குறிப்பிட்ட இடம் மட்டும் காருண்யா நகர் என்று அழைக்கப்பட்டுவந்தது.

இந்தச் சூழலில், தற்போது அஞ்சலகம், போக்குவரத்துக் கழகத்தின் பெயர்ப்பலகை, அரசுத் துறை வங்கிகள், காவல் நிலையம் போன்ற அனைத்திலும் காருண்யா நகர் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி கிராம மக்களின் அரசு ஆவணங்களான வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அனைத்து ஆவணங்களிலும் நல்லூர் வயல் என்ற கிராமத்தின் பெயர் காருண்யா நகர் என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே காருண்யா நகர் என்ற பெயரை அகற்றிவிட்டு நல்லூர் வயல் என்ற பழமையான பெயரையே அரசு அடையாள அட்டைகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் கொண்டுவர வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அப்பகுதியில் நல்லூர் வயல் மீட்புக் குழு என்ற அமைப்பு இதற்காக ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க... காருண்யா நகரான நல்லூர் வயல்: பெயரை மாற்றக் கோரி சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.