ETV Bharat / state

மைசூர் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6ஆவது நபர் கைது

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஆறாவது நபர் கைதுசெய்யப்பட்டார்.

author img

By

Published : Sep 1, 2021, 6:01 AM IST

student rape case
student rape case

கோவை: கடந்த 24ஆம் தேதி மைசூர் கல்லூரி மாணவி தனது நண்பருடன் மைசூர் சாமுண்டீஸ்வரி மலைக்குச் சென்றபோது, ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஈரோடு மாவட்டம் தாளவாடி சூசையபுரம் பூபதி (24), திருப்பூர் மாவட்டம் சேயூர் அருகே லூர்துபுரம் கருவேலங்காடு பகுதியைச் சேர்ந்த நடராஜ் (46) என்பவரின் மகன் முருகேசன் (22), வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுவன், தாளவாடி அருகே சூசையபுரம் பகுதியைச் சேர்ந்த சூசையப்பன் மகன் ஜோசப் (28), செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் பிரகாஷ் (எ) அரவிந்த் (21) ஆகிய ஐந்து பேரையும் காவல் துறையினர் கைதுசெய்திருந்தனர்.

இதில் தொடர்புடைய ஆறாவது நபர் பேபி (எ) விஜயகுமார் (26) திருப்பூர் மாவட்டம் சேயூர் காவல் நிலையத்துக்குள்பட்ட ஆலத்தூர் பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், மைசூர் தனிப்படை காவல் துறையினர் அவரைக் கைதுசெய்து மைசூருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள தாளவாடியைச் சேர்ந்த பூபதி, ஏற்கனவே 2019ஆம் ஆண்டு சந்தன மரங்கள் கடத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வந்திருப்பதும், இதேபோல் முருகேசன் (22) ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் நடந்த கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு பிணையில் வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.