ETV Bharat / state

"முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல" - தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பில் நடந்த மனிதசங்கிலி! - மாவட்ட பொருளாளர் அஜ்மல்

கோயம்புத்தூர் : மனித நேயத்தை விரும்புவோரே இஸ்லாமியர்கள், தங்களை தீவிரவாதியாக சித்திகரிப்பது தவறு என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியினர், தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி அணிவகுப்பு நடத்தினர்.

இஸ்லாமியரின் வாசகங்கள்.
author img

By

Published : Sep 9, 2019, 12:01 AM IST

கடந்த மூன்று மாதங்களாகவே தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர் கோயம்புத்தூர் ஆத்துப்பாலத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இஸ்லாமியரின் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாவட்ட பொருளாளர் அஜ்மல் கூறுகையில், தீவிரவாதம் என்றாலே முஸ்லீம்கள் என்று கூறுவது வழக்கமாயிற்று, இது மிகவும் தவறான, மன வருத்தமான செயல் என்று கூறினார்.

மேலும் அவர் ,பல்வேறு சமூகத்தினர் வாழும் இந்நாட்டில் இஸ்லாமியர்களை மட்டும் தீவிரவாதியாக சித்தரிக்கும் விதமாகவே பெரும்பாலான செய்திகள், செய்தித்தாள்களில் வருகின்றன. இவ்வாறு செய்வதால் தங்களின் பெண்கள், குழந்தைகள் இந்த சமூகத்தில் தனித்து விடப்பட்டு, விரோதமான மக்களாக பார்க்கப்படுகின்றனர் என்று கூறினார்.

மனித நேயத்தை மட்டுமே விரும்புவோர் இஸ்லாமியர்கள், எங்களை தீவிரவாதியாக சித்தரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Intro:மனித நேயத்தை விரும்புவோரே முஸ்லிம்கள், எங்களை தீவிரவாதியாக சித்திகரிப்பது தவறு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். கோவை ஆத்துப்பாலத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி அணிவகுப்பு.Body:மனித நேயத்தை விரும்புவோரே முஸ்லிம்கள், எங்களை தீவிரவாதியாக சித்திகரிப்பது தவறு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

தீவிரவாதத்திற்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் சார்பாக 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கோவை ஆத்துப்பாலத்தில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த மூன்று மாதங்களாகவே இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் இன்று கோவை ஆத்துப்பாலத்தில் நடைபெற்றது.

மனித சங்கிலியில் குழந்தைகள் முதல் பெரியோர் உட்பட 1000 பேர் கலந்துக் கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் மாவட்ட பொருளாளர் திரு அஜ்மல் தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்கள் என்று கூறுவது வழக்கமாக உள்ளது என்றும் இது மிகவும் தவறான மற்றும் மன வருத்தமான செயல் என்றும் கூறினார். பல்வேறு சமூகத்தினர் வாழும் இந்நாட்டில் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதியாக சித்திகரிக்கும் விதமாகவே பெரும்பாலான செய்திகள், செய்தித்தாள் வருகின்றன இவ்வாறு செய்வதால் எங்களின் பெண்கள் மற்றும் குழந்தைகள் சமூகத்தில் தனிக்கப்பட்டு விரோதமான மக்களாக பார்க்கப்படுகின்றனர் என்று கூறினார்.
மனித நேயத்தை மட்டுமே விரும்புவோர் முஸ்லிம்கள் என்றும் அதை மக்களிடையே கொண்டு செல்வோர் என்றும் அப்படிப்பட்ட எங்களை தீவிரவாதியாக சித்திகரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.