ETV Bharat / state

’இந்திய மூலப்பொருள்கள் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்’ - protest against Rising Cost of Raw Materials

கோயம்புத்தூர்: இந்திய மூலப்பொருள்கள் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என சிறு,குறு தொழில் சங்கத்தலைவர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Dec 15, 2020, 6:01 PM IST

மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோவை தொழில்துறை அமைப்பினர் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிரைண்டர், மின் மோட்டார் போன்ற இயந்திரங்களை காட்சிப்படுத்தி தொழில்துறை அமைப்பினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறுகுறு தொழிற்சங்கத்தலைவர் ஜேம்ஸ்,” கரோனா நெருக்கடிக்கு பின்னர் தற்போதுதான் தொழில்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. இப்போது எவ்வித முகாந்திரமும் இன்றி தொழிற்துறை சார்ந்துள்ள அனைத்து மூலப்பொருட்களுக்கும் 30 விழுக்காட்டில் இருந்து 140 விழுக்காடு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருட்கள் விலையுயர்வு என்பது தங்கத்தின் விலையை விட அதிகமாகவுள்ளது. இதனால் சிறு குறு தொழில் துறையினருக்கு வேலைவாய்ப்பு வராது. கோயம்புத்தூர் தொழிற்துறை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

ஆண்டிற்கு ஒருமுறை மூலப்பொருள்களுக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு ஒரு தனி குழு அமைக்க வேண்டும். அதில் சிறு,குறு தொழில்முனைவோர்கள் இருக்கும்படி செய்யவேண்டும். மூலப்பொருட்கள் இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும். தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் மூலப்பொருள்களின் ஜிஎஸ்டி வரியை 5 விழுக்காடாக மாற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூரில் பீளமேடு பகுதியில் பாலம் கட்டுவதால் மூடப்பட்ட ஸ்டீல் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். உள்நாட்டிலேயே மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், அயல்நாட்டிற்கு இந்திய மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தவேண்டும்”என்றார்.

நாளை (டிச.16) தொழிற்சாலை அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மூலப்பொருள்கள் விலை உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.