கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள மாப்பிள்ளைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). இவரது மனைவி சத்தியபிரியா (30) இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த சிறுவன் வீட்டில் அடிக்கடி டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் சிறுவனைக் கண்டித்துள்ளார். அடிக்கடி டிவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும், அப்போதுதான் படிக்க முடியும் என மகனை கண்டிக்கும்போது, மகனை கண்டிக்க வேண்டாம் என தமிழ்ச்செல்வனின் மனைவி சத்தியா கணவரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கணவர் தமிழ்செல்வனுக்கும் மனைவி சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதுய இதைக்கண்ட சத்தியாவின் தாய் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.
![மருமகன் தமிழ்ச்செல்வன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-pollachi-suicide-wife-vis-tn10008_13022022202206_1302f_1644763926_494.jpg)
ஆனால், தமிழ்ச்செல்வன் தங்களது குடும்ப தகராற்றில் நீங்கள் தலையிட வேண்டாம் எனக் கூறி மாமியாரைக் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சத்யாவின் தாய் மரகதம் (50), தனது கணவரான தண்டபாணியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மரகதம், தண்டபாணி ஆகிய இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த மரகதம், தண்டபாணியைக் கண்ட உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
ஆனால், மரகதம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். தண்டபாணி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![தற்கொலை எதற்கும் தீர்வல்ல..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14458480_pp.jpg)
தகவல் அறிந்து வந்த வடக்கிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். மருமகன் திட்டியதால் மாமியார், மாமனார் ஆகிய இருவரும் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மூளைச்சாவடைந்த மணப்பெண் - உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!