கோயம்புத்தூர்: வடவள்ளி அருகே உள்ள நவாவூரை சேர்ந்தவர்கள் சஞ்சீவ் சங்கர் (46) நந்தினி (45) தம்பதி. இவர்களின் மகன் ரவி கிருஷ்ணா (22). கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் செப்டம்பர் மாதம் பேரூர் அருகே உள்ள ரிசார்ட்டுக்கு சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினார்.
பின்னர் மறுநாள் காலையில் நண்பர்களுடன் காரில் வீட்டிற்குத் திரும்பிய போது, கார் தென்னமநல்லூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் ரவி கிருஷ்ணன் உள்பட 3 பேர் இறந்தனர். இதனால் விரக்தி அடைந்த ரவி கிருஷ்ணன் பெற்றோர் நேற்று (அக். 19) பூச்சி மருந்தைக் குடித்ததாகத் தெரிகிறது.
செல்போன் மூலம் நந்தினியின் அண்ணன் தொடர்பு கொண்ட போது போனை யாரும் எடுக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நந்தினியின் அண்ணன் உடனடியாக தங்கை வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் இருவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இதில் சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். இவரின் கணவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு; வட மாநில இளைஞரை தேடி வரும் போலீசார்