ETV Bharat / state

காவல்துறைக்கு எதிராகப் போராட்டம்: 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது! - திமுகவை சேர்ந்த 100 பேர் கோவையில் கைது

கோவை: திமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போடுவதாக பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

DMK arrested
author img

By

Published : Oct 11, 2019, 5:42 PM IST

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் உள்ளிட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாத நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இது குறித்து அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட திமுக பொருப்பாளர் தென்றல் செல்வராஜ் கூறுகையில், “சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை தடுக்கக் கோரி திமுகவினர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு காவல் துறையினர் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மக்கள் நலப் பிரச்னைகளைத் தட்டிக்கேட்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதற்கு வலியுறுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், காவல் துறையினருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.

100க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது!

மேலும், அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'ஆட்சி மாறும் மறுநாளே முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி'

Intro:dmkBody:dmkConclusion:திமுகவினர் மீது பொய் வழக்குப் போடும் காவல்துறையை கண்டித்து பொள்ளாச்சியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கு மேற்பட்ட திமுகவினர் கைது

பொள்ளாச்சி : அக்: 11
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் உள்ளிட்ட பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் சாக்கடை வசதி,குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் மேலும் பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாத நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மார்க் பார்களை தடுக்கக் கோரி திமுகவினர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் இதற்கு காவல்துறையினர் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் மக்கள் நலப் பிரச்சனைகளை தட்டி கேட்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள் போட தூண்டும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின்பேரில் வழக்கு போடப்படுவதை கண்டித்து இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நகர கழகப் பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள் மருதவேலு, முகமது யாசின், துரை ,வால்பாறை பால்பாண்டி உட்பட 100 மேற்பட்ட திருவள்ளுவர் திடலில் தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கு மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்
பேட்டி - தென்றல் செல்வராஜ் மாவட்ட பொருப்பாளர் தி.மு.க
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.