கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மார்க்கெடிற்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டுவரப்பட்டு விற்பனையாகும். உள்ளூர் வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி மாவட்டம் முழுவதும் உள்ள சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வர். இது தவிர தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளின் விலையும் தக்காளி மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படும்.
இங்கு 25 கிலோ எடையுள்ள ஒரு தங்காளி பெட்டி 3 நாட்களுக்கு முன்பு ரூபாய் 450 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரு பெட்டி 900 முதல் 1,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் சில்லறை கடைகளில் கிலோ ரூபாய் 25-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கனமழையால் அறுவடைக்கு தயாரான தக்காளி டன் கணக்கில் அழுகி உள்ளன இந்த திடீர் விளைவு உயர்வால் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஒரு தலைவரை கண்டுபிடிக்க முடியாத கட்சி காங்கிரஸ்" - ஹெச் ராஜா