ETV Bharat / state

பீர் குடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ! - covai monkey video

கோவை மேட்டுப்பாளையத்தில் குரங்கு ஒன்று பீர் பாட்டிலில் மது குடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மது குடிக்கும் மங்கி
மது குடிக்கும் மங்கி
author img

By

Published : Jan 24, 2022, 7:19 PM IST

கோவை : மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்குச் செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது.

மேட்டுப்பாளையத்திலிருந்து மலைப்பாதை வழியாக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பயணிப்பது வழக்கம். அவ்வாறு சுற்றுலா வரும் சில பயணிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளிலும், மலைப்பாதைகளிலும் அமர்ந்து மது அருந்துவது அதிகரித்து வருகிறது.

இவர்களைக் கண்டறிந்து வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லக்கூடிய மலைப்பாதையில் குரங்கு ஒன்று பீர் பாட்டிலில் மது குடிக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குரங்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை கடிக்கும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.

தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறுகையில், 'மலைப்பாதை வழியாகப் பயணம் மேற்கொள்பவர்கள் அடிக்கடி இதுபோன்று மதுபாட்டில்களை சாலை ஓரத்திலும், மலைப் பாதையிலும் வீசி செல்கின்றனர்.

மது பாட்டில்களை உடைப்பதால் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது.

பீர் குடிக்கும் குரங்கு

வனத்துறையினர் பகல் பொழுதில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், இரவு நேரத்தில் ஒரு சிலர் சாலையோரத்தில் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர்.

இதன் காரணமாக வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுக்க வனத்துறையினர் மலைப்பாதை மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : அட அட.. விமான நிலையத்தில் ராஷ்மிகா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.