மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அக்கட்சியின் துணை தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் கலந்துகொண்டார். கட்சியின் தலைவர் கமலஹாசன் காணொலி மூலம் தனது பிறந்தநாளை கொண்டாடும் மகளிர் அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மகேந்திரன், "வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் பெரிய தாக்கத்தை உருவாக்கும். கூட்டணி அமைப்பது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கோவையில் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர் முழுவதும் ஒட்டப்பட்ட 60 ஆயிரம் போஸ்டர்களை, அதிமுகவினர் கிழித்துள்ளனர்.
தமிழ்நாட்டை ஆளும் அதிமுக மக்கள் நீதி மய்யத்தை கண்டு அச்சப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நற்பணி செய்ய அழைக்கும் கமல்!