கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைகட்டி, தூமனூர், சேம்புகரை உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் மானியத்துடன் கோவை கிரடாய் அமைப்பு, ரவுண்ட் டேபிள் அமைப்பு, செங்கல் சூலை உரிமையாளர்கள் ஆகியோரிடம் உதவி பெற்று 43 வீடுகளை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து ஆதிவாசி மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பங்கேற்ற கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டிக்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு அளித்தனர். அப்போது ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.வும் ஆதிவாசி மக்களுடன் இணைந்து நடனத்தை ஆடி அசத்தினார். இதையடுத்து வீடுகளில் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் ஆதிவாசி மக்களுக்கு ஆறுக்குட்டி ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்!